Simmam

சிம்மம் (Simmam)
மகம், பூரம். உத்திரம் 1
சிம்ம ராசியின் ராசியாதிபதி நவகிரகங்களின் முதன்மை கிரகமான சூரிய பகவானாவான். இது கால புருஷனின் இருதயத்தை குறிப்பிடும் இரண்டாவது ஸ்திர ராசியாகும். மகம், பூரம், உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சிம்ம ராசிக்காரர்களாக கருதப்படகிறார்கள். சிம்ம ராசி ஒரு பார்வை ராசியாகும். இந்த ராசிக்கு பகலில்தான் வலு அதிகம். மேஷம், கடகம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகள் சிம்ம ராசிக்கு நட்பு ராசிகளாக அமைகின்றன.


Simmam (சிம்மம்)
17 Sep 2019

Simmam (சிம்மம்)
September 2019

Simmam (சிம்மம்)
New Year 2018 Palan

Guru Peyarchi 2019 Simmam (சிம்மம்)

Sani Peyarchi 2019 Simmam (சிம்மம்)

Rahu Ketu Peyarchi 2019 Simmam (சிம்மம்)

உடலமைப்பு (Physical Appearance)
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய வயதில் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் காலம் செல்ல செல்ல உடல் பருமனாகவும், பருமனுக்கேற்ற உயரமும், உருண்டையான முகமும், அழகான கண்களும் கொண்டிருப்பார்கள். இவர்கள் பேசும்போது கைகளையும், கண்களையும் அசைக்காமல் இருக்க முடியாது. முன்கோபம் அதிகம் உள்ளவர் என்றாலும் அனாவசியமாக கோபப்பட மாட்டார்கள். அழகான கண் இமைகள் இருக்கும். கண்களாலேயே பல கதைகள் பேசும் ஆற்றல் கொண்டவர்.

குண அமைப்பு (Character)
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். அன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி யாவும் உடையவர்கள். சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடுவார்கள். முகஸ்துதிக்கு அடிமையாவார் என்பதை புரிந்து கொள்ளும் உடனிருப்பவர்கள் இவர்களை புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்துக் கொண்டு பின்னால் திட்டுவார்கள். ஆனால் பிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்வார்கள். இவர்களின் அமைதியான தோற்றத்தை கண்டு ஏமாற்றிவிட முடியாது. வீண் சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விடாமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவார்கள். அதிலும் தனக்கு இடையூறு செய்பவர்களை வேரோடு களைந்த பின்தான் நிம்மதியடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் பாகுவதை தவிர்ப்பார்கள். வாழ்க்கையில் பல தோல்விகளைக் கண்டாலும் இறுதியில் ªவ்ற்றி இவர்களுக்கே. நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவரதாலால் தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். இவர்களுக்கு நியாயமாக தோன்றும் எல்லாமும் மற்றவர்களுக்கு நியாயமாக தோன்றவேண்டிய அவசியமில்லை என்பதால் நிறைய பேரின் பகைமையை எளிதில் சம்பாதித்து விடுவார்கள். என்றாலும் தங்களுடைய திறமை சாமர்த்தியம் போன்றவற்றால் எதிலும் தனித்து நின்று போரலலடி வெற்றி பெறுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.

மணவாழ்க்கை (Marriage)
சிம்மராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை சொந்தத்தில் அமையாது. அந்நியத்தில் அமைந்தாலும் மன வேற்றுமைகளுடன்தான் வாழ்க்கையை நடத்த முடியும். அடக்கி ஆளும் குணமும், சந்தேக மனப்பான்மையும் கொண்டவர்களாதாலால் கருத்து வேறுபாடுகள் நிறையவே ஏற்படும். திருமணத்திற்குப் பின் கூட்டு குடும்பமாக வாழ்வதைவிட தனித்து வாழ்வதையே விரும்புவார்கள். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்வார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.

பொருளாதார நிலை (Finance, Wealth)
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வருமான நிலை சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத வகையில் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் தனது தேவைக்கேற்றவாறு எந்தவிதத்திலாவது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வார்கள். உயர் தரமான பொருட்களையே வாங்க விரும்புபவர்கள் என்பதால் செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. உத்தியோகத்திலோ, தொழிலிலோ ஊதியம் பெறுவது ஒருவாரு இருந்தாலும் தன்னுடைய சாதுர்யமான சாமர்த்தியத்தால் பண வரவுகளை பெருக்கிக் கொள்வார்கள். கடன் வாங்குவதென்பது இவர்களுக்குப் பிடிக்காது. கடன் வாங்கினாலும் அதை நியாயமாக திருப்பி செலுத்தி விடுவதால் கடன்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தன்னுடைய சுய சம்பாத்தியத்தினால் வீடு, மனை போன்றவற்றை அமைத்துக் கொள்வார்கள். வண்டி, வாகன, வசதிகளும் உண்டாகும். ஆடம்பரமான உடைகளை நவீன பொருட்களையும் அதிகம் விரும்புவதால் மிகுந்த செலவாளிகளாகவும் இருப்பார்கள்.

புத்திர பாக்கியம் (Children)
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிகம் ஆண் பிள்ளைகளே பிறக்கும். முன்யோசனை அதிகம் உடையவர்கள் என்பதால் பிள்ளைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்வார்கள். கடவுளின் பூரண ஆசி பெற்றவர்கள் சிம்ம ராசிக்கார்கள் என்பதால் புத்திர வழியில் அனுகூலமானப் பலனையே அடைவார்கள்.

தொழில் (Work, Career, Business)
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அரசாங்க உத்தியோகம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அரசியல் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டாலும் நல்ல பெயர் லாபம் கிட்டும். வழக்கறிஞர் பணி, சங்கீதம், கவிதை இயற்றுதல், உணவு தானியங்கள் தயாரித்தல், மூலிகை, மருந்து செய்தல் போன்றவற்றில் லாபம் கிட்டும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்பட்டாலும் எங்கும் அதிக காலம் தங்கமாட்டார்கள். அடிமைத் தொழிலை விரும்பாதவர்கள் என்றாலும் உத்தியோகத்திலிருந்தால் முன்னுக்கு வரமுடியும். அதுவே தொழிலாளிகளானால் மிகவும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். கலை துறையில் கூட இவர்களால் பிரகாசிக்க முடியும் என்றாலும் பணவரவுகளை எதிர்பர்க்க முடியாது. சற்று முன்கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் இவர்களால் மற்றவர்களிடமும் ஒத்துப்போவது கடினமாகும்.

உணவுவகைகள் (Food)
சிம்மராசி காரர்கள் முடிந்தவரை கிழங்கு வகைகளை நீக்கி கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்துள்ள பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது. எண்ணெய் பொருட்களை தவிர்ப்பதால் கொழுப்பு அதிகமாவதை குறைக்க முடியும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை (Lucky)
எண் (Number) – 1,2,3,9,10,11,12,18
நிறம் (Color) – வெள்ளை, சிவப்பு
கிழமை (Day) – ஞாயிறு, திங்கள்
கல் (Stone) – மாணிக்கம்
திசை (Direction) – கிழக்கு
தெய்வம் (God) – சிவன்