Posted on Nov 10, 2017

நடிகை நமீதாவுக்கும் அவரது நண்பரும் காதலருமான வீராவுக்கும் நவம்பர் 24-ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

actress-namitha-boyfriend-lover-marriage-date
Actress Boyfriend-Lover-Marriage-Date

வீரேந்திரா என்ற வீரா மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘புலி முருகன்’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பரத்துடன் பொட்டு, மற்றும் மியா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நமீதாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. புதுமுக நடிகர் வீரேந்திரா என்ற வீராவை மணக்கப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

வீரா ‘மாடல்’ ஆக இருக்கிறார். ‘மியா’ படத்தில் நமீதாவும் வீராவும் இணைந்து நடித்து வந்தனர். அப்போது இருவரும் நெருங்கி பழகி காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை வீடியோவில் பேசி நமீதா வெளியிட்டு இருக்கிறார்.