Posted on Nov 14, 2017

துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் அடுத்து படத்துக்கு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், அவருக்கு ஜோடியாக ரீத்துவர்மா நடிக்கிறார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் படப்பிடிப்பு நாளை (புதன் கிழமை) டெல்லியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

kannum-kannum-kollaiadithal-movie-news-20171114
Dulquer Salmaan’s next ‘Kannum Kannum Kollaiadithal’

ரீத்துவர்மா, ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்புலு’ என்ற தெலுங்கு படத்தில், கதாநாயகியாக நடித்தவர். இப்போது, ‘துருவ நட்சத்திரம்’ என்ற படத்தில், விக்ரம் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்கிறார். இவர் ‘கோலி சோடா,’ ‘10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களில் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

“ஓகே கண்மணி படத்துக்குப்பின், துல்கர் சல்மான் நடிக்கும் நேரடி தமிழ் படம் இது. காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதை. துல்கர் சல்மான், சாப்ட்வேர் என்ஜினீயராக நடிக்கிறார். ரீத்துவர்மா, அழகான இளம்பெண்ணாக வருகிறார். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்டோ ஜோசப் தயாரிக்கிறார். இவர், 45 மலையாள படங்களை தயாரித்தவர்.