Posted on Nov 20, 2018

மறைந்த டைரக்டர் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படம், ‘அழியாத கோலங்கள்.’ படத்தின் தலைப்பை போல், அந்த படத்தின் கதையும் கவித்துவமாக அமைந்து இருந்தது. பல வருடங்களுக்குப்பின், ‘அழியாத கோலங்கள்-2’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.

இதில், சிறந்த நடிப்புக்காக தேசிய விருது பெற்ற அர்ச்சனா, மற்றும் ரேவதி, நாசர், பிரகாஷ்ராஜ் ஆகிய 4 பேரும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். எம்.ஆர்.பாரதி திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளரின் கதை, இது. ஒரு வங்காள படத்தின் கதையை முறைப்படி வாங்கி, தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம். விருது பெற்ற அன்று இரவில் நடைபெறும் சம்பவமே கதை.

இதில், எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், அவருடைய மனைவியாக ரேவதி, ரேவதியின் தோழி மற்றும் கல்லூரி பேராசிரியையாக அர்ச்சனா, போலீஸ் அதிகாரியாக நாசர், டி.வி.யில் செய்தி வாசிப்பவராக ஈஸ்வரிராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில், ‘சஸ்பென்ஸ்’ இருக்கிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) படத்தைதிரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.”