Sukran

சுக்கிரன் (Sukran: Planet Mercury)

How to Reach Sukran Temple :
Directions:
Open Timings:
Pooja Timings :

சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். சூரியனிடமிருந்து வரும் ஒளி கதிர்களில் 76 சதவீகிதத்தை வாங்கி பிரதிபலிப்பதால் எப்பொழுதும் மிகவும் பளபளப்புடையதாக உள்ளது. சுக்கிரனுக்கு துணை கோள்கள் கிடையாது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சுற்றி வருவதால் சுக்கிரனை பகலில் காண முடிவதில்லை. விஞ்ஞானிகள் சுக்கிரன் முழுவதும் பாலைவனமாக உள்ளதாகவும் அங்கு எப்பொழுதும் புயல் காற்று வீசி வருவதாகவும் கூறுகின்றனர்.

தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக குரு விளங்கியது போல, அசுரர்களுக்கெல்லாம் குருவாக விளங்கியவர் சுக்கிரனாவார்.

How to Reach Sukran Temple :

Sukran Temple Timings :

புராணத்தில் சுக்கிரன்

பிராமண குலத்தில் பிறந்தாலும் அசுரர்களுக்கு ஆதரவாக விளங்கியவர் பார்க்கவன் என்ற சுக்கிரன். பார்க்கவன் இவரது இயற்பெயராகும். இவர் இளம் வயதிலேயே பல கலைகளையும் கற்று தேர்ந்தார். எல்லாம் கற்ற அந்தனராக இருந்தாலும் அசுரர்களை வழிபடுத்தி செல்லும் பணியில் ஈடுபட்டார். சுக்கிரன் தேவகுரு பிரகஸ்பதிக்கு எந்த வகையிலும் சளைத்தவரில்லை. அசுரர்களின் முன்னேற்றத்திற்காக எல்லா உதவிகளையும் செய்தார். அசுரர்களுக்கு வெற்றி மேல் வெற்றிகளை தேடி தந்தார். சிவபெருமானிடம் தவமிருந்து சஞ்சீவினி மந்திரத்தை பெற்றார். போரில் மடிந்த அசுரர்களுக்கு மறு உயிர் தந்து உயிர்ப்பித்தார்.

சுக்கிரன் பளபளப்பான வெள்ளை நிறத்தை உடையவர். லஷ்மி இவரது அம்சம். வெள்ளிகிழமை இவரது ஆதிக்க நாளாகும். புளிசுவை பிரியர். நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். வெள்ளி இவரது உலோகம். வாசனை திரவியம் வெண்தாமரை, பெண்மோகம், மொச்சை, தயிர், பால் அண்ணம், இவற்றிற்கு காரகனாவார்.

இவர் இல்லை என்றால் உலகில் இன்பம் என்பதே இருக்காது. எங்கெல்லாம் சுகம் உண்டோ அங்கெல்லாம் சுக்கிரனின் ஆதிக்கம் உண்டு. மன்மத லீலைகளுக்கு சொந்தகாரர் காமக்காரகன் என்ற பெயரும் இவருக்குண்டு. எண் கணிதத்தில் 6ம் எண் இவருடையது. 6ம் எண் உடையவர்கள் மிகவும் கவர்ச்சி வாய்ந்தவர்களாகவும், மற்றவர்களை கவரும் உடற்கட்டுடனும் இருப்பார்கள். விட்டு கொடுக்காத மனம் உடையவர்களாக இருந்தாலும் அன்புக்கு அடிபணிவார்கள். பகட்டான வாழ்க்கையை வாழவும், அலங்கார பிரியர்களாகவும் இருப்பார். அழகிய பொருட்களை விரும்புவார்கள்.

மல்லிகைப்பூ

பஞ்சு போன்ற வெண்மை நிறம் கொண்ட மல்லி பூவிற்கு சுக்கிரன் காரகனாகிறார். மல்லிகை பூவின் மணமானது காமத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது. மணமான பெண்கள் மாலை நேரத்தில் தலைவாரி மல்லிகை சூட்டி கணவனின் வருகைக்காக காத்திருப்பார்கள். எத்தனை களைப்பாக கணவன் வீடு திரும்பினாலும் மல்லிகை பூவின் மணம் அத்தனை களைப்பையும் போக்குவிடும். காமகாரகனல்லவா சுக்கிரன் அடுத்து என்ன செய்வார்? ஆணையும், பெண்ணையும் இணைத்து சந்ததியினரை உருவாக்குவார். இதற்காகத்தான் திருமணம் முடிந்தவுடன் சாந்திமுகூர்த்தத்தில் மஞ்சம் முழுவதும் மல்லிகை பூவை தூவி மணக்க செய்கிறார்கள். திருமணம் கலக்க இல்லறம் இனிக்க சுக்கிரன் மல்லிகை பூவாய் மணம் வீசி, இனிய உறவுக்கு உதவி செய்வார். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா என்ற பாடலை விரும்பாத பெண்களும் உண்டோ?

வெள்ளி கிழமைகளில் பெண்களே தனி அழகாக தெரிவார்கள்.

முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளி கிழமைதான் உகந்த நாள். இவர்கள் நறுமண வாசனை திரவியங்களை அதிகம் உபயோகிப்பார்கள். இவர்களின் திருமணத்தில் மல்லிகைப் பூ இல்லாமல் இருக்காது. அதனால் தான் இவர்களுக்கு வாரிசுகளும் அதிகம், அனைத்துமே சுக்கிரனின் ஆதிக்க மல்லவா.

கலை , சினிமா, இசை, அழகுபொருட்கள் சுகவாழ்க்கை

கலை இசை போன்றவற்றிற்கும் சுக்கிரனே காரகனாவார். சுக்கிரனின் ஆதிக்கம் ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல கவர்ச்சியும், நடனம் இசை, போன்ற வற்றில் ஈடுபாடும் அதிகம் உண்டாகும். சினிமா துறைகளில் நட்சத்திரங்களாக ஜொலிப்பார்கள். சினி ஸ்டார் என்ற பெயரையும் பெறுவார்கள். நல்ல பணவரவு உண்டாகும். வீடு, மனை, வண்டிவாகனம், புதிய நவீன பொருட்களின் சேர்க்கையாவும் அமையும் ஆடம்பர அழகு சாதனங்களை அதிகம் பயன்படுத்துவார்கள. சுகவாழ்வு, சொகுசுவாழ்வு போன்ற யாவற்றையும் வாரி வழங்குவார் சுக்கிரன். நடிகர், நடிகைகளின் வீட்டில் நாய் இல்லாமா? காவலுக்கென்று தனி நாய். மடியில் தவழ தனி நாய் என சுக்கிரனின் ஆதிக்கத்தில் திளைத்திருப்பார்கள்.

சினிமாத்துறை மட்டுமின்றி பாடல் துறைகளிலும் சுக்கிரனின் ஆதிக்கத்தால் பிரசித்தி பெற முடியும். உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்ற கொலம்பியா ரிக்£ர்டுகளில் இசை தட்டிற்கு பக்கத்தில் ஒரு நாய் சின்னம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். முதன் முதலில் இசை தட்டில் பதிவு செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் கடினமான முயற்சிகளுக்கு பிறகு நாய் குரைக்கும் சத்தத்தை தான் பதிவு செய்ய முடிந்ததாம். அதனால் தான் நாய் சின்னத்தை வைத்திருப்பார்கள்.

விஞ்ஞானம் வளர்ந்து தற்போது பல மீடியாக்கள் இருந்தாலும், மக்கள் முதன் முதலில் இசையை ரசித்தது ஸிணீபீவீஷீ மூலம் தான்

Radio 21417 = 15 – 1+5=6 ம் எண்ணின் ஆதிக்கமல்லவா. சுக்கிரனின் காரகத்துவத்தில் முக்கிய அங்கம் பெறுவது கார் எப்படி என பார்ப்போமா?

car 312 – 6 புரிகிறதா

வெள்ளை ஆடை

மருத்துவ மனைகளில் அனைவரும் வெள்ளை நிற ஆடைகளையே பயன் படுத்துகிறார்கள். அசுரர்களை காப்பாற்ற சிவனிடம் வரம் பெற்று இறந்தவர்களை உயிர்ப்பித்த வல்லவரல்வா சுக்கிரன். அது போல மனித உயிர்களை காக்கும் தொழிலை செய்யுமிடமல்லவா மருத்துவமனை. அதனால் தான் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட வெண்ணிற ஆடையை பயன்படுத்துகிறார்கள்.

அது போல கப்பலுக்கும் சுக்கிரன் காரகத்துவம் வகுப்பதாக நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் கப்பல் படையில் பணி புரிபவர்களும் வெள்ளை ஆடைய பயன்படுத்துகிறார்கள். சுக்கிரன் எங்கெல்லாம் தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளார் பார்த்தீர்கள்?

சர்க்கரை வியாதி

சுக்கிரன் நீரிழிவு நோய்க்கு காரகனாவார். ஜாதகத்தில் சுக்கிரன் ஆதிக்கம் அதிகம் இருந்தால் நீரிழிவு நோய் கண்டிப்பாக வரும். அது போல ரகசிய நோய் பால் வினை நோய், மர்ம உறுப்பில் தோன்றும் நோய்களுக்கும் சுக்கிரன் தான் காரகன். சுக்கிரன் க்ஷிமீஸீus அல்லவா அதனால் தான் இந்த நோய்களின் பெயரும் க்ஷிமீஸீமீக்ஷீணீறீ ஞிவீsமீsமீs ஆகும். இப்படிப்பட்ட நோய்கள் பரவாமல் இருக்க தயார் செய்யப்பட்டிருக்கும் ஆணுறைகளின் நிறமும் வெண்மை தான். இதில் மறைப்பதற்கோ மறுப்பதற்கோ ஒன்றுமேயில்லை. எல்லாம் சுக்கிரனின் லீலைகள் என எடுத்துகொள்வோம்.

உதாரணத்திற்கு பாருங்கள் 15 ம் தேதி பிறந்த நீரோ மன்னன் ரோம் நகர் தீப்பற்ற எரிவது கூட தெரியாமல் பிடில் என்ற இசை கருவியை வாசித்து கொண்டிருந்ததாக சரித்திரம் கூறுகிறது. ஒரு பெண்ணை அடைவதற்காக அவளின் கணவனையும், அவனின் முதல் மனைவியையும், அதை தடுத்த தன் தா¬யும் கொலை செய்தவன். இசை பிரியமும், பெண்பித்தும் சுக்கிரனின் காரக தத்துவங்கள் தானே.

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நாடுகள்

உலகின் சொர்க்கம் என அழைக்கப்படும் நகரம் பாரீஸ். புது புது உடைகளும் அலங்காரப் பொருட்களும் அணிகலன்களும் உருவாகும் இடம் பாரீஸ். அழகான பெண்கள் ஆப்பிள் நிற அழகிகள், அவர்கள் நடத்தும் இசை, நாட்டியங்கள் எல்லாவற்றிற்கும் தனிசிறப்பு உண்டு. கலைத்துறைக்கு உரிய உயரிய விருதான செவாலியே விருதை வழங்குவதும் இங்கேதான். பாரிஸை சுக்கிரன் எப்படி தாங்கி கொண்டிருக்கிறார் என பார்ப்போமா,

PARIS 81213 = 15 , 1+5= 6 சுக்கிரனின் ஆதிக்கம் சிறப்பாக உள்ளதல்லவா.

டென்மார்க், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஹங்கேரி போன் நாடுகளின் முக்கிய பொருளாதாரமே பசுவை வைத்து தான். இந்நாடுகளில் சுக்கிரனின் ஆதிக்கங்களான பால், ஆடை, ஆபரணப்பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டு எந்த போராட்டங்களிலும் புரட்சிகளிலும் ஈடுபடாமல் சுகவாழ்வு, சொகுசுவாழ்வு வாழ்வது தான். இந்நாடுகள் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகின்றன.

அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்து உலக சுற்றுலா மையங்களில் முதன்மை வகிக்கிறது. உல்லாசமாக பொழுதை போக்குகின்ற பயணிகள் வந்து போவதால் அந்நிய செலவானி நிறைய கிடைக்கிறது. இங்கு ஜெர்ஸி, சிந்து போன்ற இனபசுக்களால் பால் உற்பத்தியும் மிக சிறப்பாக நடைபெறுகிறது. டென்மார்க்கிலும் பால் உற்பத்தி சிறப்பாக நடைபெற்று பல நாடுகளுக்கு பால் சம்மந்தப்பட்ட பொருட்களை அனுப்பி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் பொருளாதார நிலையிலும் மேன்மையுடன் திகழ்கிறது. இதிலிருந்து சுக்கிரன் பலம் பெறுவது மட்டுமின்றி சுக்கிரனின் காரகத்துவங்களாலும் வாழ்க்கை நிலை மேன்மையடையும் என்பது புரிகிறதல்லவா?