Ketu

கேது (Ketu : South)

How to Reach Ketu Temple :
Directions :
Open Timings :
Pooja Timings :

மோட்ச காரகன் மெய்ஞான துறைகளை வளர்க்கும் மகான்களை தன் ஆதிக்கத்தில் வைத்து ஆட்டிப்படைப்பவர் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களையும் ஆட்டிவைப்பவர். சிவ பக்தியுடையவர். ஞானி, பிட்சை, தவம், எளிமை, கடுமை, மதகோட்பாடு போன்றவற்றிற்கு காரகம் வகிப்பவர். சிவ பக்தியுடையவர். உலக பந்தத்திலிருந்து விடுவிப்பவர். வியாதியிலிருந்து நிவாரணம் தருபவர். கண்நோய், குஷ்டம், தோல்வியாதி, பைத்தியம், சித்த சுவாதீனம் பசி, தற்கொலை எண்ணம், கபடதன்மை, வறுமை, அனுபவம், தத்துவம், கஞ்சா போன்றவற்றிற்கும் காரகத்துவம் வகிப்பவர். விநாயகரின் அம்சமானவர். புரசு பூப்போன்ற சென்னிறம் கொண்டவர். கைதேர்ந்த மருத்துவர்களை உருவாக்குகிறவர். பலதரப்ட்ட மனிதர்களோடு பழகும் வாய்ப்பினை தருபவர்.

ஏழாம் எண்ணுக்குரியவர். இந்த எண்ணில் பிறந்தவர்கள் தனிப்பட்ட தத்துவ நோக்குடையவர்கள். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு கொண்டவர்களாதலால் சம்பாதிக்கும் பணத்தை பல தரப்பட்ட சமூகநலப் பணிகளுக்காக செலவிடுகிறார்கள். நிலையான மனபக்குவம் இல்லாதவர்கள். எப்பொழுதும் குழப்ப நிலையிலேயே காணப்படுவார்கள்.

கெட்ட பின் ஞானி

கேது ஒருவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் சோதனை வேதனைகளை அதிகம் கொடுத்து வாழ்க்கையில் நிறைய அனுபவ பாடங்களை கற்று கொடுப்பார். பின் அவர்களே பிறருக்கும் புத்திமதி சொல்லும் அளவிற்கு ஞானியாக்கி விடுவார்.

கஞ்சா

கஞ்சாவிற்கும் காரகன் கேதுவே, பெரும்பாலும் ஞானிகள் கஞ்சா அடிப்பவர்களாகவே இருப்பதை நாம் அறிவோம். பல புத்தகங்களிலும் படித்து இருக்கிறோம். சினிமாக்களிலும் பார்த்திருக்கிறோம்.

குஷ்ட நோயும் கேதுவின் ஆதிக்கம்தான். குஷ்ட ரோகிகள் கூட தங்களுடைய வலியை மறப்பதற்காக கஞ்சா அடிப்பதற்கு சில நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பத்திரிகை செய்திகளும் உண்டு. கைதேர்ந்த மருத்துவர்களை உருவாக்குவதில் வல்லவரான கேது மருத்துவ கல்வி பயிலுபவர்களையும் போதை பொருட்களுக்கு அடிமையாக்காமல் விடுவதில்லை. எல்லாமே கேதுவின் ஆதிக்கம் தானே.

புத்தர் இயேசு

புத்தர் உலகில் உள்ள இன்ப துன்பங்களை எல்லாம் அனுபவித்து பாச பந்தங்களிலிருந்து விடுபட போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றவர். புத்தர் அமர்ந்துள்ள தாமரை பூவில் 7 இதழ்கள் அமைந்திருந்திருக்கும். ஞானம் கேதுவின் ஆதிக்கமல்லவா.

இயேசு பிரான் 7 ம் தேதி பிறந்தவர். இவர் உலகத்திற்கு பெரும் தத்துவத்தை உருவாக்கி தந்தவர். தத்துவ நூலான பைபிளை உருவாக காரணமானவர். பைபிளில் பெரும் பாலான இடங்களில் 7ம் எண்ணின் ஆதிக்கத்தை காணமுடியும். ஏழு சுவர்கங்கள், ஏழு குதிரைகள், ஏழு மாதா கோவில்கள், கடவுளின் ஏழு உயர் உலகில் நடமாடுகிறது. என்று 7ம் எண் பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. தாவீதிலிருந்து கிறிஸ்துவின் பிறப்பு வரை ஏழுதலைமுறைகள் இருந்திருப்பதை பல ஆராய்ச்சி நூல்களும் நிரூபித்துள்ளன. கேதுவின் ஆதிக்கத்தின் ஆற்றலை பார்த்தீர்களா.

சார்லி சாப்லின்

உலகம் போற்றிய நடிகருள் சார்லிசாப்லீனும் ஒருவர். இவர் பிறந்த தேதி 16 & 1+6= 7. கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர் வாழ்க்கையில் பல சோதனைகளையும் சங்கடங்களையும் சந்தித்தவர். இவர் சினிமா துறைக்கு வந்த போதும் பெரும் பாலான பாத்திரங்கள் ஊர் சுற்றுபவராகவும் அனாதையாகவும், பிச்சைகாரராகவும் தான் நடித்தார். பணம், புகழை பெற்றாலும் அவர் வாழ்க்கை வேதனை நிறைந்ததாகதான் இருந்தது. கேதுவின் ஆதிக்கமல்லவா விடுவாரா சுமமா?