Budhan

புதன் பகவான் (Budhan : Planet Mercury)

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். பூமியிலிருந்து புதனை காண்பது கடினம். கோள்களில் மிக சிறய கோளாகும். புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் 88 ஆகும். புதன் எப்பொழுதும் சூரியனை நோக்கியே இருக்கும். புதன் பாதரசம் நிறம்பிய கிரகம் என்றும் பச்சை நிறமுடைய கிரகம் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது.

புராணத்தில் புதன்

சந்திரனுடைய புதல்வராகிய புதன் ஒரு அலிகிரகமாகும். சந்திரன் குருபகவானிடம் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்தான். பின்பு தட்சனுடைய 27 பெண்களையும் மணந்து கொண்டான். பிறகு மகாவிஷ்ணுவின் ஆசி வேண்டி ராஜ சரய யாகம் நடத்தினான். அந்த யாகத்திற்கு அனைத்து தேவர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். குருவால் யாகத்தில் கலந்து கொள்ள முடியாததால் தன் மனைவி தாராவை அனுப்பி வைத்தார். யாகத்தில் கலந்து கொள்ள வந்த தாரா சந்திரனின் மீது காதல் கொண்டு அதன் பயனாகிய அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அவர் தான் புதனாவார். புதன் யாரிடமும் வளராமல் தனித்தே சகல கலைகளையும் கற்று தேர்ந்தார்.

புதன் எல்லா விதமான வித்தைகளுக்கும் காரண கர்த்தா ஆவார். கல்விக்கு காரகனாவர். புக்தி கூர்மை மிக்கவர். பச்சை இவரது நிறம். குணத்தில் வைசியர். பள்ளி சாலைகள் இவருக்கு மிகவும் பிடித்தவை. மகாவிஷ்ணுவை பூஜித்து கிரக அந்தஸ்து பெற்றதால் மகாவிஷ்ணுவின் ஓர் அங்கமாக கருதப்படுகிறார். பொக்குஷத்தை பாதுகாக்கவும் கணக்கு எழுதவும் உகந்தவர். புக்தியால் செய்யப்படும் புரோக்கர், கமிஷன், காண்டிராக்ட், போன்றவற்றிற்கு மூலகாரணம் இவரே. கதை காவியம் போன்றவற்றை ஜோடித்து எழுதவும், கூத்தாடுதல், நகைச்சுவையுணர்வு போன்றவற்றிற்கும் மூலகாரணமும் இவரே. வரது வடிவம் களி வெந்தயம், பாசிப்பயிறு போன்றவற்றில் விரும்பி இருப்பவர். உவர்ப்புசுவையை அதிகம் விரும்பி உண்பவர். இவரது திசை வடக்கு, வாத நோய், நரம்பு தளர்ச்சி போன்றவற்றிற்கும் காரணம் இவர் தான். புதன் 5 ம் எண்ணாக என்கணிதத்தில் கூறப்பட்டுள்ளது. 5ம் எண்ணில் பிறந்தவர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அனைவரிடமும் நட்பு பாராட்டுபவர்கள். புதிய கண்டு பிடிப்புகளாலும், எந்த காரியத்தையும் விரைவில் முடிக்கும் ஆற்றலாலும் அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.

பச்சை இங்க்

பெரிய அளவில் கல்வி கற்று எந்தவொரு செயலையும் புத்திசாலிதனத்தோடு ஆராய்ந்து செயல்பட கூடிய அளவிற்கு திறமையுடன் பெரிய பதவிகளை வகிப்பவர்கள் பச்சை இங்கில் கையெழுத்து போடும் அங்கீகாரததை பெறுகிறார்கள். கவர்மெண்ட்டில் பெரிய அளவில் அதிகார பதவிகளையும் அடைகிறார்கள். அறிவு காரகனை புதனின் நிறம் பச்சையல்லவா. உலகெங்கும் பச்சை இங்க்கில் கையெழுத்துப் போடுபவர்களுக்கென்று ஒரு தனிமரியாதையே இருக்கின்றது.

பச்சை சிக்னல்

பொறுமை, புக்திகூர்மை, நிதானம் யாவும் புதனின் அச்மசமாகும். எனவே தான் வண்டிவாகனங்களில் பயணம் செய்யும் போது பச்சை நிற சிக்னல் விழுந்தால் மட்டுமே புறப்படுகிற«£ம். பச்சை நிறத்தின் மகத்துவத்தைப் பார்த்தீர்களா?

கீரின்கார்டு

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியலல, போன்ற வெளிநாடுகளில் கிரீன் கார்டு இல்லாமல் வசிக்க முடியாது. கிரீன் கார்டு என்பது அந்நாட்டு அங்கீகாரத்திற்காக வழங்கப்படும் ஒரு ஐ.டி. எந்தவொரு நாட்டிலும் தொடர்ந்து 5 வருடங்கள் வசித்தால் இந்த கிரீன் கார்டைப் பெற்று அந்த நாட்டின் பிரஜையாகி விடலாம்.இதில் பாருங்கள் அங்கீகாரம் பிரஜை 5 ஆண்டு பச்சை இந்த எண்ணிற்கும் புதனே ஆதிக்கம் செலுத்துபவராவார். புதனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தானே.

ஐந்து ரூபாய் நோட்டு

நமது இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5 ரூபாய் நோட்டு பச்சை நிறத்தில் இருக்கும். அதில் பச்சை வயல் வெளியில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருக்கும். அதாவது விவசாயத்தை குறிப்பதாக இருக்கும். 5 ரூபாய் நோட்டும் பச்சை, புதனின் ஆதிக்கம். விவசாயமும் புதனின் ஆதிக்கம்.

பார்லிமெண்ட்

மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுபவர்கள் அதாவது பச்சை மையில் கையெழுத்துப் போடுகிறார்கள். மக்களின் கருத்துக்களை எடுத்து சொல்லி தீர்மானங்களை பெறும் இடமாக பார்லிமெண்ட் விளங்குகிறது. இதன் உறுப்பினர்களும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார்கள். மக்கள், தீர்மாணம், 5 ஆண்டு இவை அனைத்தும் புதனின் காரகத்துவங்களே.

வறுமையும், புலமையும்

புதன் வறுமை கிரகம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. புதன் நல்ல அறிவு கிரகம். கல்வி கேள்விகளில் மிக்க புலமையை தருபவர். பண்டைய காலங்களில் புலவர்கள் எல்லாம் தம் வறுமையை போக்கி கொள்ள அரசர்களை தம் பலமையால் பாடி பொற்காசுகளைப் பெற்று செல்வார்கள். புலவர்கள் எப்பொழுதும் வறுமை வாழ்ந்தார்கள். என்பது குறிப்பிடதக்கது.

பெருமாளுக்கு பச்சை நிற துளசி

பெருமாள் புதனின் அம்சம். எல்லா தெய்வங்களுக்கும் வண்ண வண்ண மலர்களால் அர்ச்சனை செய்தாலும் பெருமாளுக்கு மட்டும் பச்சை நிறமான துளசியை கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். பச்சையும் பெருமாளும் புதனின் அம்சமாக உள்ளதல்லவா?

பச்சை கிளி சொல்லும் ஜோதிடம்

ஜோதிடம் புதனின் காரகத்துவம். எவ்வளவோ பேர் பச்சை கிளியை வைத்து சீட்டை எடுக்கச் சொல்லி அதில் வரும் படத்தை வைத்து ஜோதிடம் சொல்கிறார்கள். இதற்கு கிளி ஜோதிடம் என்று பெயர்.

ஷேக்ஸ்பியர்

புலவர்கள் அறிவுத்திறமையுடன் இருந்தாலும் வறுமையில் தான் வாழ்ந்தார்கள் என்று முன்பே பார்த்தோம். இதில் புத்தகங்களையும் கவிதைகளையும், காவியங்களையும் எழுதி குவித்தவர் மிகப்பெரிய அறிவாளியுமானவர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற அறிஞானாவார். இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையுணர்வும் புதனின் காரகத்துவங்களே. இவர் பிறந்த தேதியும் 23 2+3=5 ம் எண்ணும் புதணுக்குரியதே.

சட்ட நூல்களை எழுதிய மேதை டாக்டர். அம்பேத்கார் இந்திய கண்டத்தின் சட்ட நூலையும் இயற்றியவராவார். அறிவாளியான அவர் பிறந்த தேதியும் புதனின் எண்ணாகிய 14& 1+4= 5 ஆகும்.

புதன் என்றாலே வியாபாரி என நமது ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆங்கிலத்தில் புதனுக்கு Mercury திலிருந்து தோன்றியது தான் Merchant என்ற வார்த்தை. அதாவது வியாபாரி, புதனின் காரகத்துவத்தை பார்த்துர்களா.