Viruchigam
விருச்சிகம் (Virchugam)
விசாகம் 4, அனுஷம், கேட்டை

அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் சூரியனுடன் இணைந்து 10-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் மிகச் சிறப்பான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். தாராள தன வரவுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களால் ஓரளவுக்கு ஆதாயங்களை பெறுவீர்கள். உங்கள் மீது இருந்த வம்பு வழக்குகள், பழிச் சொற்கள் யாவும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செவுகள் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்கள் ராசிக்கு குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் 12-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிட்டும்.

பரிகாரம் – சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் மனக்கவலைகள் விலகும்.
சந்திராஷ்டமம் – 13-09-2017 மாலை 05.47 மணி முதல் 15-09-2017 இரவு 08.37 மணி வரை

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001