Thulam
துலாம் (Thulam)
சித்திரை (3,4), சுவாதி, விசாகம் (1,2,3)

அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சுக்கிரன் 10-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன், செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப் பலனைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவார்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் கௌரவமான நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரம் – ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வதால் குருவின் அருள் கிட்டும்.
சந்திராஷ்டமம் – 11-09-2017 மதியம் 03.04 மணி முதல் 13-09-2017 மாலை 05.47 மணி வரை

Astrologer : Dr. Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001