Simmam
சிம்மம் (Simmam)
மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதத்திற்கு பிறகு முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் முயற்சி செய்தால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம் – சனிக்கிழமைகளில் உபவாச விரதம் இருப்பது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வதால் மனஅமைதி கிட்டும்.
சந்திராஷ்டமம் – 07-09-2017 காலை 07.00 மணி முதல் 09-09-2017 பகல் 11.46 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001