Sani Peyarchi

Sani Peyarchi (சனிப்பெயர்ச்சி) - சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

Sani Peyarchi 2017 2018 2019 2020 Palangal

Mesham

Rishabam

Mithunam

Kadagam

Simmam

Kanni

Thulam

Viruchigam

Dhanusu

Makaram

Kumbam

Meenam

Types of Sani Peyarchi (சனி வகைகள்)

1. ஏழரைச் சனி: 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். பொதுவாக ஒருவரது வாழ்நாளில் நான்கு முறை ஏழரைச் சனி வரும் (மங்கு, பொங்கு, தங்கு, மரண). ஒரு மனிதனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்.

அவரவர் ராசிசக்கரத்தில் (சந்திரன் நிற்கும் இடம் ”ராசி” எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை “விரயச் சனி” எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2-ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை “ஜென்மச் சனி” என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை “பாதச் சனி” என்றும் குடும்பச் சனி, வாக்குச் சனி எனவும் அழைப்பர். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.

மங்கு சனி: இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.

பொங்கு சனி: வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்

தங்கு சனி: பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.

மரண சனி: நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள்

2. அஷ்டம சனி:
அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.

3. அர்த்தாஷ்டம சனி:
4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் கூறுவார்கள்.

4. கண்ட சனி:
7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

சனி பகவான் கிரகஸ்துதி
நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி காயத்ரி
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்||