Rishabam
ரிஷபம் (Rishabam)
கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. உங்கள் ராசிக்கு சனி சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் மற்றவர்களை அனுசரித்து சென்றால் தான் அன்றாட பணிகளை திறம்பட செயல்படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். இதுநாள் வரை 5-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் 6-ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாக இருப்பதால் பணவிஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் முயற்சி செய்தால் முன்னேற்ற நிலை அடையலாம்.

பரிகாரம் – செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனையும் சிவனையும் வழிபடுவது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 31.08.2017 அதிகாலை 01.52 மணி முதல் 02-09-2017 பகல் 01.56 மணி வரை மற்றும் 27-09-2017 காலை 09.55 மணி முதல் 29-09-2017 இரவு 10.23 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001