Rahu Ketu Peyarchi

நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்பக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தருவதால் தான், நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்கிறோம். ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது பலங்களை வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

Rahu Ketu Peyarchi 2017 2018 2019 Palangal

Mesham

Rishabam

Mithunam

Kadagam

Simmam

Kanni

Thulam

Viruchigam

Dhanusu

Makaram

Kumbam

Meenam

ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். இராசி மண்டலத்தின் வடதுருவப் புள்ளி இராகு என்றும், தென்துருவப் புள்ளி கேது எனவும் வழங்கப்படுகின்றன. மேற்கத்திய ஜோதிடத்தில் இராகு “டிராகன்ஸ் ஹெட்” என்றும், கேது “டிராகன்ஸ் டெயில்” என்றும் குறிப்பிடப்படுகின்றன.

ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், இராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும் பாம்பு என அழைக்கப்படும், இராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும்.

மனிதத் தலையும் பாம்பு உடலையும் கொண்ட இராகு கருமை நிறத்தவர், நீண்டு நெடியவர். குரூரமான குணம் உடையவர். அற்புதமான செயல்களை உருவாக்கிக் காட்டக் கூடிய ஆற்றல் மிக்கவர் இராகு ஆவார். திருநாகேஸ்வரத்தில் இராகு தனது இரு தேவியர்களான நாகவல்லி, நாக்கன்னி சமேதராய், உள்பிரகாரத்தில் கோவில் கொண்டு அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார். இத் திருத்தலமே இராகு பரிகாரத்திற்கு முதலிடமாகவும், சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான இராகு – கேதுவுக்கு என தனியாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை. எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டு அதிபதியின் குணத்தை கிரகித்துக் கொள்வர். இவர்கள் மற்ற கிரகங்களைப் போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே இராசி மண்டலத்தை வலம் வரக் கூடியவர்கள்.

மத, தெய்வ வழிபாடுகள் அனைத்தும் நம்பிக்கையின் பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகள்தான் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவுவன ஆகும். மனிதனின் துன்பத்தையும், துயரங்களையும், கஷ்டங்களையும் இந்த நன்நம்பிக்கைகள்தான் களைகின்றன என்றால் மிகையாகாது. மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் விளைவிக்கின்ற வழிபாட்டு முறைகள் புதுப் புது வகைகளில் தோன்றக் காரணம் ஆகின்றன. அந்த எதிர்பார்ப்பின் விளைவே இராகுகால பூஜை ஆகும்.

செவ்வாய்க் கிழமை அன்று துர்க்கைக்குச் செய்யப்படும் இராகு கால பூஜை உடனடி பலன் கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். இராகு காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தமிழ் நாட்டில் எவரும் செய்வதில்லை. ஆனால், பிற மாநில மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இராகு காலத்தில் திருமணம் கூட செய்கிறார்கள்.

எல்லா இராசிகளுக்குமான இராகுவுக்கான பொதுவான பரிகாரங்கள்:
செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிவன் கோவில் பிரார்த்தனை நல்லது. திருநாகேஸ்வரம், சங்கரன் கோவில் ஆகிய திருத்தல வழிபாடுகள் சிறப்பு. புற்று உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் எலுமிச்சை விளக்கேற்றி, பால், முட்டை வைத்தல் நல்லது. இராகு காயத்ரி பாராயணம் செய்க. மேற்கூறிய பரிகாரங்களை இராகுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

எல்லா இராசிகளுக்குமான கேதுவுக்கான பொதுவான பரிகாரங்கள்:
ஞாயிறு தோறும் அருகம் புல் மாலை சாத்தி கணபதி வழிபாடு. சனி தோறும் பெருமாள் கோவிலில் துளசி மாலை சாத்தி பிரார்த்தனை செய்தல். அதே நாள் – ஹனுமனுக்கு துளசிமாலை சாத்தி வழிபடுதல் ஒருமுறையேனும் கீழப்பெரும்பள்ளம் சென்று வருதல் ஆகிய பரிகாரங்கள் கேதுவுக்குச் செய்வது நலம் பயக்கும்.

தென் காளஹஸ்தி
உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் ஞானம்மன் உடனுறை திருக்காளத்திநாதர் திருக்கோயிலில் ராகு-கேதுக்கள் தனித் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இங்கு வாரம் தோறும் ஞாயிறுக்கிழமை கூட்டுப் பிரார்த்தனையாக பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. இதில் கலந்து கொண்டு வழிபடும் பக்தர்களின் எல்லா குறைகளும் நீங்குவதாக நம்பிக்கையாகும்.