Mithunam
மிதுனம் (Mithunam)
மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு ராசியதிபதி புதன் செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்வில் நிலவும் சங்கடங்கள் எல்லாம் படிப்படியாக குறையும். நினைத்த காரியங்கள் யாவும் நிறைவேறும். பொருளாதார நிலை மேன்மையாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுதலாக இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினை பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற அனுகூலமான பலன்கள் கிட்டும்.

பரிகாரம் – தினமும் விநாயகரை வழிபடுவதால் நன்மைகள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 02-09-2017 பகல் 01.56 மணி முதல் 04-09-2017 இரவு 11.52 மணி வரை மற்றும் 29-09-2017 இரவு 10.23 மணி முதல் 02.10.2017 காலை 08.48 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001