Mesham
மேஷம் ()
அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு, ஜென்ம ராசியில் சுக்கிரன், 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் மாத கோளான சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பண வரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருந்தாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று உங்கள் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப் பலன் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வதும், ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சந்திராஷ்டமம் – 04-04-2018 அதிகாலை 01.09 மணி முதல் 06-04-2018 பகல் 11.38 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001