Mesham
மேஷம் (Mesham)
அசுவனி, பரணி, கிருத்திகை 1ம் பாதம்

அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் தனக்கு நட்பு கிரகமான சூரியனின் வீடான 5-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் கூடும். மாத கோளான சூரியன் மாத பிற்பாதியில் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி நற்பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் நல்ல நட்புறவு ஏற்படும். அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். இதுநாள் வரை 6-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் சமசப்தஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

பரிகாரம் – சனிப்ரீதி ஹனுமனை வழிபடுவதாலும், அனுமன் துதிகளை கூறுவதாலும் கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டமம் – 24-09-2017 இரவு 09.52 மணி முதல் 27-09-2017 காலை 09.55 மணி வரை

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001