Rasi April 2018 Palangal. How your planet positions influence your Life, Work, Love, Family, Education, Career, Job, Romance, Relationship, Friends, Money, Wealth, Politics, Agriculture



Meenam
மீனம் (Meenam)
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ம் வீட்டில் சுக்கிரன், 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் பேசும் போது பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் நிலையில் சற்று மந்த நிலை சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை கூட செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடை தாமதங்களுக்குப் பின் அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றியை பெற முடியும்.

பரிகாரம் – பிரதோஷ காலங்களில் விரதமிருந்து சிவ பெருமான வழிபாடு செய்வது மிகவும் நல்லதாகும். மற்றும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் சிறப்பு.

சந்திராஷ்டமம் – 01-04-2018 மாலை 05.52 மணி முதல் 04-04-2018 அதிகாலை 01.09 மணி வரை மற்றும் 29-04-2018 அதிகாலை 01.58 மணி முதல் 01-05-2018 காலை 09.35 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001