Meenam
மீனம் (Meenam)
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய மாதமாக இம்மாதம் இருக்கும். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தமாக வீடு வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள பண வரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகள் லாபமளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்துடன் சேரும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் சிறந்த முறையில் செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.

பரிகாரம் – விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவதால் நற்பலன்கள் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 22-09-2017 மதியம் 12.04 மணி முதல் 24-09-2017 இரவு 09.52 மணி வரை

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001