Makaram
மகரம் (Makaram)
உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்

அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன், ராகு, 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுடன் இருப்பவர்களே உங்களது அமைதியை குறைக்கும் சூழ்நிலை உருவாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல பல அனுகூலங்களை பெற முடியும். பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் நல்ல லாபம் கிட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற்ற விட முடியும். கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம் – செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருகனை வழிபட்டால் செவ்வாயின் பாதிப்புகள் குறையும்.
சந்திராஷ்டமம் – 17-09-2017 இரவு 12.07 மணி முதல் 20-09-2017 அதிகாலை 05.00 மணி வரை

Astrologer : Dr. Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001