Rasi April 2018 Palangal. How your planet positions influence your Life, Work, Love, Family, Education, Career, Job, Romance, Relationship, Friends, Money, Wealth, Politics, Agriculture



Kumbam
கும்பம் (Kumbam)
அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி- செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் இம்மாதம் பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். தொழில் வியாபார ரீதியாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். மந்த நிலை மாறி நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலப்பலன் உண்டாகும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் மிக சிறப்பாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்களும் குறையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்–. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், ஆதரவுகளும் மன மகிழ்ச்சியை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயக பெருமானை வழிபடுவதும், சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வதும் நல்லது. தடைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும்.

சந்திராஷ்டமம் – 26-04-2018 இரவு 08.20 மணி முதல் 29-04-2018 அதிகாலை 01.58 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001