Kumbam
கும்பம் (Kumbam)
அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு 10-ல் சனி சஞ்சரிப்பதாலும் 7-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழிலில் நெருக்கடி, கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும். இதுவரை 8-ல் சஞ்சரித்த குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு செல்வது சாதகமான அமைப்பு என்பதால் சிக்கல்கள் எல்லாம் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – பிரதோஷ காலங்களில் சிவனை வணங்கினால் நல்லது நடக்கும்.
சந்திராஷ்டமம் – 20-09-2017 அதிகாலை 05.00 மணி முதல் 22-09-2017 மதியம் 12.04 மணி வரை

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001