Kadagam
கடகம் ()
புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்

அன்புள்ள கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் அமையும். உடல்நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் ஒரளவுக்கு சாதகமாக இருப்பார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவி உயர்வுகளையும் பெற முடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

பரிகாரம் – விநாயகர் வழிபாடு செய்வதும், விநாயகர் துதிகளை படிப்பதும் மற்றும் நவகிரக வழிபாடு செய்வதும் நல்லது.

சந்திராஷ்டமம் – 11-04-2018 மதியம் 12.38 மணி முதல் 13-04-2018 இரவு 10.08 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001