Dhanusu
தனுசு (Dhanusu)
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி குரு திருக்கணிதப்படி வரும் 12-ஆம் தேதி முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் உங்களுக்கு நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். பொருளாதார நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவால் நீங்கள் விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வதும், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாகவே நடைபெறும். உங்கள் ராசிக்கு சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதாலும் 12-ல் சனி சஞ்சரிப்பதாலும் மற்றவர்களை அனுசரித்து சென்றால் தான் ஏற்றங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப் பலனை பெற முடியும். இதுவரை இருந்த போட்டிகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடையலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் – வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-09-2017 இரவு 08.37 மணி முதல் 17-09-2017 இரவு 12.07 மணி வரை

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001