Rasi April 2018 Palangal. How your planet positions influence your Life, Work, Love, Family, Education, Career, Job, Romance, Relationship, Friends, Money, Wealth, Politics, Agriculture



Dhanusu
தனுசு (Dhanusu)
மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ஜென்ம ராசியில் செவ்வாய், சனி, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். வண்டி வாகனங்கள் மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமண சுப காரியங்கள் சில தடைகளுக்குபின் கைகூடும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும், விட்டு கொடுத்து நடந்து கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவிற்கு சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

பரிகாரம் – சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது, நவகிரகங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

சந்திராஷ்டமம் – 22-04-2018 மதியம் 12.39 மணி முதல் 24-04-2018 மாலை 04.00 மணி வரை.

Astrologer : Dr.Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001