மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.

கடகம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். கடன் பிரச்சனை ஓரளவு குறையும்.

கன்னி
இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகி லாபம் பெருகும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

துலாம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். மன நிம்மதி ஏற்படும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். வெளிக்கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

மகரம்
இன்று உங்களுக்கு பணபற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.

கும்பம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வெளிப் பயணங்களை தவிர்க்கவும்.

மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும்.

Astrologer Dr. Murugu Bala Murugan
முனைவர் முருகு பால முருகன்
Ph.D in Astrology.
Mobile: +91 7200163001, 9383763001