இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் வண்டி வாகனங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை. ஏனென்றால் வண்டி, வாகன நெரிசல்களில் நடப்பதற்கு பாதைகளும் இல்லை, நடந்து செல்வதை யாரும் விரும்புவதும் இல்லை. எங்கு சென்றாலும் காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ சென்று இறங்குவதைத்தான் கௌரவமாக நினைக்கிறார்கள். அதிலும் சொந்தமான வாகனங்கள் இல்லை என்றாலும் கால் டாக்ஸி, ஆட்டோ என கட்டண வாகனங்களும் தாராளமாகவே கிடைக்கிறது. பஸ்ஸில் செல்பவர்களும் ரயிலில் பயணம் செய்பவர்களும் ஒரு புறம் ஷேர் ஆட்டோக்களும் பெருகிவிட்டதால், ஏதாவது ஒரு வாகனங்களில் பயணம் செய்யாதவர்களே இல்லை என கூறலாம். பள்ளிகளில் கூட இன்று இலவச சைக்கிள்கள் வழங்கப்படுவதால் எல்லோருக்குமே வாகன யோகமானது இருக்கத்தான் செய்கிறது என்றாலும் சொந்தமாக சம்பாதித்து அந்த வருமானத்தில் வண்டி வாகனம் வாங்க கூடியயோகம் இருந்தால்தானே மகிழ்ச்சி அந்த யோகம் யாருக்கு அமையும் என பார்ப்போமா?

ஒருவரின் ஜாதகத்தில் 4ம் வீடு வண்டி வாகன யோகத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். வண்டி வாகனங்களுக்கு காரகன் சுக்கிரனாவார். 4ம் அதிபதியும் சுக்கிரனும் பலமாக இருந்து விட்டால் வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும். அதை அனுபவிக்கும் அதிர்ஷ்டமும் உண்டாகும். சுக்கிரனும் 4ம் அதிபதியும் சுபகிரக பார்வை, சுபகிரக சேர்க்கையுடன் இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் சொகுசான ஆடம்பரமிக்க வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும்.

சந்திரன் பயணங்களுக்கு காரகன் என்பதால், சந்திரன் சுக்கிரன் 10ம் அதிபதியுடன் இருந்தால் வண்டி வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், உடன் சனியின் சம்மந்தமும் இருந்தால் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் யோகம், பயண தொடர்புடையவைகளுக்காக சொகுசு வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி இரும்புக்கு காரகன் என்பதால் சனி சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 4ம் வீட்டதிபதியுடன் சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம், கனரக வாகனங்கள் வாங்கக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

நடைமுறை வாழ்க்கையே மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் எல்லாமே அவசர கதியில் நடைபெறுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்புவதில்லை. இருசக்கர வாகனங்களையோ, நான்கு சக்கர வாகனங்களையோதான் பயன்படுத்துகிறார்கள். நடந்து செல்வதற்கு பாதைகள் இல்லை என்பது வேறு விஷயம் என்றாலும் வண்டி, வாகனங்களை பயன்படுத்துவதை பேஷனாகவும், பெருமையாகவும் நினைக்கிறார்கள். செல்ல வேண்டிய இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் பணிகளை எளிதாக முடிப்பதற்கும், அலைச்சலைக் குறைப்பதற்கும் சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது எளிய முறையாக உள்ளது. இப்படி சொந்தமாக வண்டி, வாகனங்களைப் பயன்படுத்துவது என்பது எல்லோருக்குமே அமைந்து விடுவதில்லை. அதற்கு ஜோதிட ரீதியாக 4ம் பாவம் பலம் பெற்றிருக்க வேண்டும். எந்தெந்த கிரகங்களின் சேர்க்கையால் சொந்த வண்டி, வாகன யோகம் உண்டாகும் என்று பார்ப்போமா?

நவகிரகங்களில் வண்டி, வாகன காரகன் சுக்கிரனாவார். ஒருவரது ஜாதகத்தில் 4 பாவமும், சுக்கிரனும் பலம் பெற்றால் வண்டி, வாகன யோகம் சிறப்பாக அமையும்.

4ம் அதிபதி லக்னாதிபதி சந்திரன் இணைந்து கேந்திர திரிகோணங்களில் இருந்தால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

இத்துடன் சுக்கிரனும் இணைந்து பலமாக அமையப் பெற்றால் சொகுசான நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

4,9 க்கு அதிபதிகள் இணைந்து உடன் குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்று சந்திரனும் பலம் பெற்றிருந்தால் நான்கு சக்கரம் வாங்கும் யோகம், மதிப்பு மிக்க உயர்பதவிகளால் அரசாங்க வாகனங்களை பயன்படுத்தும் யோகம் உண்டாகும்.

அது போல 4ம் அதிபதி 9,10 க்கு அதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்று குரு பார்வைப் பெற்றால் உயர்ரக வாகன யோகம் உண்டாகும். 4,9 க்கு அதிபதிகள் இணைந்து கேந்திர திரிகோணங்களில் நட்பு வீட்டில் அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால் ஜாதகருக்கு வலிமையான வாகன யோகம் உண்டாவது மட்டுமின்றி செல்வம், செல்வாக்கு உயரும்.

4ம் அதிபதியும் சுக்கிரனும் சுபர் பார்வையுடன் வலுவாக இருந்தால் வலிமையான வண்டி, வாகன யோகம் உண்டாகும். அதுவே பாவிகள் பார்வையுடனிருந்தால் வாகனங்கள் அமைந்தாலும் அனுபவிக்கமுடியாத அளவிற்கு இடையூறுகள், நாளடைவில் பழுதடையக்கூடிய நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி சந்திரன் அல்லது சுக்கிரனுடன் இருந்து கேந்திர, திரிகோணங்களிலோ அல்லது 2,11 லிலோ இருந்தால் பலவகையில் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றாலும் அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்தில் 4ம் அதிபதி அமையப் பெற்று குருபார்வைப் பெற்றால் வலிமையான வாகன யோகம் உண்டாகும்.

4 ம் அதிபதி பகை பெற்றாலோ, நீசம் பெற்றாலோ 6,8,12 ல் மறைந்திருந்தாலோ ஜாதகருக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வாகனங்கள் வாங்க இடையூறுகள் உண்டாகும்.

அது மட்டுமின்றி வாகனங்களை அனுபவிக்கவும் தடைகள் ஏற்படும். அது போல சுக்கிரன் நீசம் பெற்றாலும் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று சுபர் பார்வையில்லாமலிருந்தால் வாகனங்கள் அமைய இடையூறுகள், அப்படி அமைந்தாலும் அதன் மூலம் விபத்துக்களை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

4 ம் அதிபதி வலுவாக அமையப்பெற்று உடன் புதன் பலமாக இருந்தால் வாகன யோகம் உண்டாகும்.

4ம் அதிபதிக்கும் சுக்கிரனுக்கும் சனியின் சம்மந்தமிருந்தால் புதிய வாகனத்தை வாங்குவதைவிட பழைய வாகனங்களை வாங்கி புதுப்பித்து அனுபவிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.

அதுபோல 4ம் இடம் சனியின் வீடாக இருந்தாலும். சனியின் ராசியில் பிறந்தவர்களுக்கும், சனி திசை நடைபெறுவபவர்களுக்கும் பழைய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பொதுவாக 4ம் அதிபதியின் திசை அல்லது புத்தியிலோ, சந்திரன், சுக்கிரனின் திசை அல்லது புத்தியிலோ 4ல் அமையக்கூடிய கிரகங்களின் திசை அல்லது புத்தியிலோ பலமான வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அது போல 4ம் அதிபதியும், சுக்கிரனும் அமைந்துள்ள வீட்டிற்கு திரிகோணத்தில் குரு கோட்சாரத்தில் வரும் போது வாகன யோகம் உண்டாகும்.